ත්රිකුණාමල දිස්ත්රික් කෘෂිකර්ම කමිට රැස්වීම අද (18) ත්රිකුණාමල දිස්ත්රික් ලේකම් කාර්යාලීය ප්රධාන ශ්රවණාගාරයේදී දිසාපති හා දිස්ත්රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්වුණා.
ගොවි සමිතිවලින් ලද ඉල්ලීමට අනුව යල කන්නයේ අස්වනු නෙලීම ආරම්භ වී ඇති බැවින් රජයේ වී ගබඩා පවිත්ර කර විවෘත කිරීමට අවශ්ය කටයුතු සිදු කරන්න යැයි දිසාපතිතුමන් විසින් අදාල ආයතන වෙත දැනුම් දුන්නේය.
තවද පසුගිය මහ කන්නයේ වගා හානි වූවන්ගේ වන්දි ලබාදීම සම්බන්ධව පැන නැගී ඇතුළු ගැටළු හා ඒවාට අවශ්ය පියවර පිලිබඳව සාකච්ඡා කෙරුණු අතර ගොවීන්ට අවශ්ය පොහොර නිසි කලට ලබාදීම සම්බන්ධවද අවධාරණයට ලක් කෙරුණු කරුණු අතර විය.
එමෙන්ම දිස්ත්රික්යේ වන අලි ගැටළු පවතින ප්රදේශවල අලි වැට ඉදිකිරීම සහ නඩත්තුව, ගව පාලනය ආදී ලැටළු සම්බන්ධයෙන්ද මෙහිදී සාකච්ඡාවට ලක් කෙරුණි.
පසුගිය රැස්වීමේදී සාකච්ඡා වූ කරුණු වල ප්රගතිය සමාලෝචනය කිරීම ද දිස්ත්රික්කයේ ගොවීන් මුහුණපාන අනෙකුත් ගැටළු හා ඒවාට ගත හැකි විසඳුම් පිලිබඳවද අවධානය යොමු විය.
මෙම අවස්ථාවට දිස්ත්රික් කෘෂිකර්ම අධ්යක්ෂ ටී. කරුණානාදන් මහතා, දිස්ත්රික් වාරිමාර්ග අධ්යක්ෂ කේ. සුබ්රමණියම් මහතා, ප්රාදේශීය ලේකම්වරුන් සහ සහකාර ප්රාදේශීය ලේකම්වරුන් ඇතුළු කෘෂිකර්ම ක්ෂේත්රයට අදාල අනෙකුත් ආයතන ප්රධානීන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.
திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்
திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (18) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
விவசாயிகள் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் பேரில், சிறுபோக அறுவடை தொடங்கியதால், அரசாங்க நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்து திறப்பற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
மேலும் விவசாயக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற ஒவ்வொரு தீர்மானங்களும் விரைவாக நிறைவேற்றப்பட்டு மாவட்ட செயலகத்துக்கு அறிக்கைகளை பொறுப்பான நிறுவனங்களால் உடனுக்குடன் அனுப்பிவைத்தல் அவசியம் என்பதனையும் மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள், விவசாயிகளின் களநிலை பிரச்சினைகள் மற்றும் மாவட்ட செயலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்கள் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
பயிர்களை இழந்தவர்களின் இழப்பீடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு தேவையான உரங்களை சரியான நேரத்தில் வழங்குவது, மாவட்டத்தில் காட்டு யானைகள் பிரச்சினைகள் உள்ள பகுதிகளில் யானை வேலிகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், கால்நடை முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே.சுப்ரமணியம், மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் கலாநிதி தி.கருணைநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,விவசாய அமைப்பின் தலைவர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




ශ්රී ලාංකික සරණාගතයින් නැවත පැමිණීම සහ නැවත ඒකාබද්ධ කිරීමේ වැඩසටහන ඉන්දියාවේ සිට මෙරටට පැමිණෙන සරණාගතයින් සඳහා පහසුකම් සැපයීම සම්බන්ධයෙන් රාජ්ය ආයතනවල නිලධාරීන් සමඟ සාකච්ඡාවක් අද (26) ත්රිකුණාමල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී පවත්වන ලදී. එම සාකච්ඡාව සිදු කෙරුණේ දිස්ත්රික්කය තුල ක්රියාත්මක වන රාජ්ය නොවන ආයතනයක් වන Oferr Ceylon ආයතනයේ සභාපතිනී එස්. සූරියකුමාරි මහත්මිය විසිනි. මෙහිදී සරණාගතයින් ලෙස ලංකාවට පැමිණෙන පුද්ගලයින් මුහුණ දෙන ප්රධාන ගැටළු ලෙස නීතිමය ලියකියවිලි, නවාතැන්, ජීවනෝපාය, සනීපාරක්ෂාව, වෘත්තීය මාර්ගෝපදේශ සහ සමාජ සහජීවනය යනාදිය හඳුනාගැනෙන අතර ඒවාට ස්ථිර විසඳුම් ලබාදීම මෙම සාකච්ඡාවෙහි අරමුණයි. මෙම අවස්ථාවට ත්රිකුණාමල දිස්ත්රික් අතිරේක දිසාපති හා අතිරේක දිස්ත්රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා, Oferr Ceylon ආයතනයේ නියෝජිතයින්, ප්රාදේශීය ලේකම්වරුන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.
உள்நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக நாட்டை விட்டு இடம்பெயர்ந்து இந்தியாவில் வாழ்கின்ற அகதிகள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பி நிலையாக வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று (26) இலங்கை எதிலியர் மறுவாழ்வு கழகத்தின் (Oferr Ceylon) ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜி.எம் ஹேமந்தகுமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில நடைபெற்றது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்புவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளான, வசிப்பதற்கான காணி, அடிப்படை ஆவணங்கள், வாழ்வாதாரம், நாடு திரும்பிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு , நிரந்தர வீட்டுத்திட்டம் , சுகாதார வசதிகள் , சமூக ஒருங்கிணைவு போன்றவை மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்குரிய தீர்வுகளை இக்கலந்துரையாடலின் மூலம் பெற்றுக்கொடுப்பதே பிரதான நோக்கமாக காணப்படுவதாக Oferr Ceylon தலைவி செல்வி . சின்னதம்பி சூரியகுமாரி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் Oferr Ceylon நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
කුච්චවේලි ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශය යටතේ ඇති පූජා භූමි ඉඩම පිළිබඳ ගැටළුව සම්බන්ධයෙන් මහජනතාව සමඟ සාකච්ඡාවක් අද (26) ත්රිකුණාමලය දිස්ත්රික් ලේකම් කාර්යාල උප ශ්රවණාගාරයේදී පැවැත්වුණා.
ඒ ත්රිකුණාමල දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති සහ විදේශ කටයුතු සහ විදේශ රැකියා නියෝජ්ය අමාත්ය අරුන් හේමචන්ද්ර මහතාගේ ප්රධානත්වයෙනි.
මෙම අවස්ථාවට ත්රිකුණාමල දිසාපති හා දිස්ත්රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතා, කුච්චවේලි ප්රාදේශීය ලේකම් සියාවුල් හක් මහතා, කුච්චවේලි ක්ෂේත්ර නිලධාරී නවසීලන් මහතා, දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ පරිපාලන නිලධාරී එස්.ආර්.කේ.එස්. කුරුකුලසූරිය මහතා ඇතුළු කුච්චවේලී ප්රදේශවාසීහු රැසක් සහභාගි වූහ.
குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலானது இன்று (26) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குச்சவெளி வெளிக்கள போதனாசிரியர் நவசீலன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய உட்பட குச்சவெளி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.







