போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும் "முழு நாடுமே ஒன்றாக " தேசிய நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (30 )காலை 10 மணிக்கு கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நிகழ்நிலை மூலமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது அனைத்து உத்தியோகத்தர்களாலும் சத்தியப்பிரமாண உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.









