இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பாடசாலை மாணவிகளின் கலை கலாசார நிகழ்ச்சிகள் மேடையை அலங்கரித்தன. கலை கலாசார நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட அனைத்து பாடசாலை மாணவிகளுக்கும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் பரிசில்களை வழங்கி கௌரவப்படுத்தினர். இதன்போது மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







