ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම එහි සම සභාපතිවරුන් වන විදේශ කටයුතු සහ විදේශ රැකියා නියෝජ්‍ය අමාත්‍ය අරුන් හේමචන්ද්‍ර මහතා, නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ජයන්ත ලාල් රත්නසේකර මහතා, ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී රොෂාන් අක්මීමන මහතා සහ ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් අද (29) ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලීය ප්‍රධාන ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණි.

මෙහිදී පසුගිය දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුවේදී ගන්නා ලද තීන්දු තීරණවල ප්‍රගතිය සමාලෝචනය කරමින් විවිධ පාර්ශවයන් විසින් ඉදිරිපත් කල යෝජනා සාකච්ඡාවට ලක්විය.

ඒ අතර ත්‍රිකුණාමල බන්ධනාගාර රැඳවියන්ට සපයන පානීය ජලයේ ගුණාත්මකභාවය පරීක්ෂා කල යුතු බවත්, ත්‍රිකුණාමල මහ නගර සභා ප්‍රදේශයේ ජලාපවාහන පද්ධතිය ප්‍රතිසංස්කරණය කල යුතු බවත්, අයාලේ යන සුනඛයන් එන්නත් කිරීම සහ පාලනය කලයුතු බවත්, මී උණ රෝගය සඳහා ගොවීන් දැනුවත් කර ඖෂධ ලබාදිය යුතු බවත් යෝජනා කෙරුණි.

එමෙන්ම සංචාරක කර්මාන්තය නඟා සිටුවීම උදෙසා ත්‍රිකුණාමල ෆෙඩ්‍රික් කොටුව සංවර්ධන සැලැස්මක් සකස් කිරීම, සංචාරක මෙහෙයුම් මධ්‍යස්ථානයක් ස්ථාපිත කිරීම, තල්මසුන් නැරඹීම සඳහා කිමිඳුම්කරුවන් සහ සංචාරක මාර්ගෝපදේශකයින් යෙදවීම යනාදී යෝජනා ඉදිරිපත් විය.

මූතූර්, පුල්මුඩේ, වෙරුගල් සහ ලංකාපටුන තොටුපල ආශ්‍රිතව ජංගම භූමිතෙල් පිරවුම්හල් ආරම්භ කිරීම, ත්‍රිකුණාමලයේ ඔසුසල මධ්‍යස්ථානයක් ආරම්භ කිරීම, අක්කර 120 ක් පමණ වන නිලාවේලි ලුණු ලේවාය සක්‍රීය කිරීම, වගා ආරක්ෂාව සඳහා ගිනි අවි නිකුත් කිරීම, අනාරක්ෂිත දුම්රිය ගේට්ටු සඳහා මුරකරුවන් යෙදවීම සහ සංඥා පද්ධති ස්ථාපිත කිරීම පිලිබඳව මෙහිදී අවධානය යොමු වූ කරුණු අතර විය.

තවද දිස්ත්‍රික්කයේ දීර්ඝ කාලීන ගැටළුවක්ව පවතින වැලි කර්මාන්තය ආශ්‍රිත ගැටළු පිලිබඳව දීර්ඝ ලෙස සාකච්ඡා වූ අතර සේරුවිල අල්ල ප්‍රදේශයේ මහවැලි ගඟේ ඉවුර ඛාදනය පිලිබඳව සොයාබැලීම සඳහා අදාල අංශ එම ප්‍රදේශයේ ක්ෂේත්‍ර චාරිකාවක් ගොස් ස්ථානීය පරීක්ෂාවන් සිදු කර අදාල ආරක්ෂිත පියවර ගත යුතු බවට තීරණය කෙරුණි.

මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්‍රී එස්. කුගදාසන් මහතා, නැගෙනහිර පළාත් ප්‍රධාන ලේකම් ටී.ඒ.සී.එන්. තලංගම මහතා, නගර සභා සහ ප්‍රාදේශීය සභා සභාපතිවරුන්, ප්‍රාදේශීය ලේකම්වරුන් සහ අනෙකුත් රාජ්‍ය නිලධාරීන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் இணைத்தலைவரான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ச. குகதாசன், ரொஷான் அக்மீமன, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன.

திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் சரிபார்க்கப்பட வேண்டும், திருகோணமலை நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள வடிகால் அமைப்பைப் புதுப்பிக்க வேண்டும், தெருநாய்களுக்கு தடுப்பூசி போட்டு கட்டுப்படுத்த வேண்டும், எலிக்காய்ச்சலுக்கான மாத்திரைகளை விநியோகிப்பதற்கான நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது.

தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் உள்ள இடங்கள் தொடர்பான விழிப்புணர்வு, சுமார் 120 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட திருகோணமலை நிலாவெளி உப்பளத்தை மீள செயல்படுத்துவது, பயிர் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வழங்குவது, பாதுகாப்பற்ற ரயில் வாயில்களில் காவலர்களை நியமிப்பது மற்றும் சமிக்ஞை அமைப்புகளை நிறுவுவது, திருகோணமலை பொது வைத்தியசாலையின் கட்டிட அமைப்பு அறிக்கை, திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான செயற்திட்டம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மேலும் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினையாக இருக்கும் மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
போரின் காரணமாக கைவிடப்பட்ட விளங்குளம் விவசாய நிலங்களை மீளப்பெறல், டோக்கியோ சீமெந்து நிறுவனம் கடலுக்கு சூடான நீர் வெளியேற்றும் விடயத்தில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) அறிக்கையை வழங்குவது, வில்கம முந்திரி திட்டத்திற்கு வழங்கப்பட்ட காணி பிரச்சினைகள், யான்ஓயா பாலம் கட்டுமான நிலை போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.

அத்துடன் பல அபிவிருத்தி தொடர்பான திட்டங்களும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதிக்காக முன்மொழியப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 07 29 at 21.32.08WhatsApp Image 2025 07 29 at 21.32.14 1

WhatsApp Image 2025 07 29 at 21.32.15WhatsApp Image 2025 07 29 at 21.32.15 1