කින්නියා, තඹලගමුව සහ කන්තලේ යන ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශවල ප්රමාණවත් තෘණ බිම් නොමැතිකම හේතුවෙන් දිස්ත්රික්කයේ කිරි ගවයන් පෝෂණය කිරීමේදී ගව අයිතිකරුවන් මුහුණ දී ඇති ගැටළු මෙම විශේෂ සාකච්ඡාවේදී අවධානය යොමු කෙරුණි. පසුගිය දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමෙිදී ඉදිරිපත් වූ මෙම ගැටළුව පිලිබඳව අදාල බලධාරීන් සමඟ සාකච්ඡා කර විසඳුම් සැපයීම මෙහි මූලික අරමුණයි.
මෙම අවස්ථාවට ප්රාදේශීය ලේකම්වරුන්, සහකාර ප්රාදේශීය ලේකම්වරුන් සහ අදාළ දෙපාර්තමේන්තු නිලධාරීන් සහ නිලධාරීන් ද සහභාගී වූහ.
திருகோணமலை மாவட்டத்தில் போதியளவிலான மேய்ச்சல் நிலம் இல்லாததால் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து சிறப்புக் கலந்துரையாடலொன்று இன்று (24) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம் ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, தம்பலகாமம், கந்தளாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் போதியளவிலான மேய்ச்சல் நிலம் இல்லாததால், கறவை மாடுகளுக்கு உணவளிப்பதில் கால்நடை உரிமையாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் இந்த சிறப்பு கலந்துரையாடலில் முன்னிலைக்கு கொண்டுவரப்பட்டு ஆராயப்பட்டன.
இதன்போது குறித்த பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், குறித்த துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.









