ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය සහ ළමා ආරක්ෂක අධිකාරිය විසින් සංවිධානය කරන ලද "ළමා ආරක්ෂාව පිළිබඳ ජාතික ප්‍රතිපත්තිය" පිළිබඳ දැනුවත් කිරීමේ සම්මන්ත්‍රණයක් අද (25) දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල ප්‍රධාන සම්මන්ත්‍රණ ශාලාවේදී ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් දිසාපති ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණි.

දිස්ත්‍රික්කයේ පාසල්වල මාර්ගෝපදේශන සහ උපදේශන ගුරුවරුන් විසින් මෙම දැනුවත් කිරීමේ සම්මන්ත්‍රණය පැවැත්වීම විශේෂත්වයකි.

ළමා ආරක්ෂාව පිළිබඳ ජාතික ප්‍රතිපත්තිය යනු දරුවන්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම සහ ඔවුන්ට වඩා හොඳ අනාගතයක් සහතික කිරීම සඳහා ශ්‍රී ලංකාවේ රජය විසින් දියත් කරන ලද ප්‍රතිපත්තියකි.

මෙම ප්‍රතිපත්තිය ළමා අපයෝජනය, හිංසනය වැනි සිදුවීම් වැළැක්වීම කෙරෙහි අවධානය යොමු කරයි.

දරුවන්ගේ අධ්‍යාපනය, සෞඛ්‍යය සහ ආරක්ෂාව කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු කළ යුතු බව ද එය අවධාරණය කරයි.

මෙම අවස්ථාවට දිස්ත්‍රික් අතිරේක දිසාපති එස්. සුදාකරන් මහතා, ජාතික ළමා ආරක්ෂක නිලධාරීන්, මාර්ගෝපදේශන සහ උපදේශන ගුරුවරුන්, විශ්ව විද්‍යාල ශිෂ්‍ය තානාපතිවරුන් සහභාගී විය.

WhatsApp Image 2025 06 25 at 16.18.33WhatsApp Image 2025 06 25 at 16.18.37

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் "தேசிய சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை" தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (25) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்
டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கானது வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களுக்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கையானது, இலங்கையில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யவும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு கொள்கையாகும்.

இந்த கொள்கையானது சிறுவர் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு, மற்றும் சுரண்டல் போன்ற சம்பவங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும், சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பல்கலைக்கழக மாணவத் தூதுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.