අල්ලස් හා දූෂණ සම්පූර්ණයෙන්ම තුරන් කිරීමේ වැඩසටහනක් වන ශ්රී ලංකා දූෂණ විරෝධී ක්රියාකාරී සැලැස්ම දිස්ත්රික් මට්ටමින් ක්රියාත්මක කිරීමේ ආරම්භක පියවරක් ලෙස මෙම අංශය විවෘත කිරීම විශේෂත්වයකි.
අල්ලස් හා දූෂණ සම්බන්ධ පැමිණිලි ඉදිරිපත් කිරීම සඳහා මහජනතාවට සහ රජයේ නිලධාරීන්ට මෙම අංශය විවෘත කර තිබේ.
දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ මාණ්ඩලික නිලධාරීන් ඇතුළු අනෙකුත් නිලධාරීන් ද මෙම අවස්ථාවට සහභාගී විය.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" இன்று (16) உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு இப்பிரிவானது திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.










