කුච්චවේලි ප්රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ ඉඩම් ගැටළු සම්බන්ධයෙන් අදාල නිලධාරීන් සමඟ විශේෂ සාකච්ඡාවක් අද (12) ත්රිකුණාමලය දිස්ත්රික් ලේකම් කාර්යාල උප ශ්රවණාගාරයේදී ත්රිකුණාමල දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති සහ විදේශ කටයුතු සහ විදේශ රැකියා නියෝජ්ය අමාත්ය අරුන් හේමචන්ද්ර මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්විණි.
මෙම අවස්ථාවට ත්රිකුණාමල දිසාපති හා දිස්ත්රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතා, කුච්චවේලි ප්රාදේශීය ලේකම් සියාඋල් හක් මහතා, අදාළ දෙපාර්තමේන්තු නිලධාරීන් සහ අනෙකුත් දෙපාර්තමේන්තු නිලධාරීන් රැසක් ද සහභාගී වූහ.
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல்.
குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சிறப்புக் கலந்துரையாடலானது இன்று (12) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குறித்த துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









