එළඹෙන පළාත් පාලන මැතිවරණයට අදාලව මැතිවරණ ආරවුල් නිරාකරණය සම්බන්ධව සහකාර තේරීම්භාර නිලධාරීන් සහ පොලිස් නිලධාරීන් දැනුවත් කිරීමේ පුහුණු වැඩසටහනක් අද (28) ත්රිකුණාමල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත්වුණා.
ඒ මැතිවරණ කොමසාරිස් ජනරාල් සමන් ශ්රී රත්නායක මහතාගේ ප්රධානත්වයෙනි. මෙහිදී වර්තමාන පළාත් පාලන ක්රමයේ සුවිශේෂීතා පිළිබඳව දැනුවත් කිරීම මැතිවරණ කොමසාරිස් ජනරාල්වරයා විසින් සිදුකෙරුණි.
වැඩබලන පොලිස්පති ප්රියන්ත වීරසූරිය මහතා zoom තාක්ෂණය ඔස්සේ නිලධාරීන් ඇමතීය.
එමෙන්ම මැතිවරණයේදී පොලිස් නිලධාරීන්ගේ වගකීම සම්බන්ධව දැනුවත් කිරීම ජ්යෙෂ්ඨ නියෝජ්ය පොලිස්පති (විශේෂ ආරක්ෂක හා මැතිවරණ) ආචාර්ය දිනේෂ් කරුණානායක මහතා ද, මැතිවරණ පනතේ ඇති නීතිමය ප්රතිපාදනයන් පිලිබඳව නියෝජ්ය පොලිස්පති (නීති දිසාව භාර) නීතීඥ රුවන් ගුණසේකර මහතා විසින් ද දේශන සිදු කරන ලදී.
අතිරේක මැතිවරණ කොමසාරිස් (නීති) චින්තක කුලරත්න මහතා විසින් මැතිවරණ නීතිය, මැතිවරණ ආරවුල් කළමනාකරණ මධ්යස්ථානය හා පොලිසියේ වගකීම, මැතිවරණ වියදම් නියාමනය, ප්රචාරක කාර්යාල හා ප්රචාරක සීමා පිළිබඳව දැනුවත් කිරීම සිදුකලේය.
තවද පොලිස් නිලධාරීන්ගේ මැතිවරණ රාජකාරි සම්බන්ධ දේශනය ජ්යෙෂ්ඨ පොලිස් අධිකාරී (අධ්යක්ෂ මැතිවරණ) පණ්ඩුල වීරසිංහ මහතා විසින් මෙහෙයවීය.
මෙම අවස්ථාවට ත්රිකුණාමල දිස්ත්රික් තේරීම්භාර නිලධාරී ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතා, ත්රිකුණාමල දිස්ත්රික් අතිරේක දිසාපති එස්. සුදාකරන් මහතා, ත්රිකුණාමල දිස්ත්රික් සහකාර මැතිවරණ කොමසාරිස් එස්.කේ.ඩී. නෙරංජන් මහතා, පොලොන්නරුව දිස්ත්රික් සහකාර මැතිවරණ කොමසාරිස්තුමිය, දිස්ත්රික් මැතිවරණ ආරවුල් කළමනාකරණ මධ්යස්ථානයේ නිලධාරීන්, දිස්ත්රික්කයේ කොට්ඨාශ භාර පොලිස් අධිකාරීවරුන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான முறைப்பாடுகளை தீர்ப்பது குறித்து உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு செயலமர்வு இன்று (28) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த விழிப்புணர்வு செயலமர்வானது தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தற்போதைய உள்ளூராட்சி முறைமையின் தனித்துவமான அம்சங்கள் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விளக்கமளித்தார்.
இதன்போது பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் நிகழ்நிலை மூலம் இணைந்து கொண்டு உரையாற்றினார்.
தேர்தல்களின் போது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்புக்கள் குறித்து சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தினேஷ் கருணாநாயக்க அவர்களும் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சட்ட பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அவர்கள் தேர்தல் சட்டத்தின் சட்ட விதிகள் குறித்தும் விரிவுரைகளை வழங்கினர்.
தேர்தல் சட்டம், தேர்தல் பிணக்குகள் முகாமைத்துவ மையம் மற்றும் காவல்துறையின் பொறுப்பு, தேர்தல் செலவின ஒழுங்குமுறை, பிரச்சார அலுவலகங்கள் மற்றும் பிரச்சார கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களை
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (சட்டம், விசாரணை மற்றும் திட்டங்கள்) பி. பீ. சி. குலரத்ன அவர்களால் தெளிவூட்டப்பட்டன.
மேலும், பொலிஸ் அதிகாரிகளின் தேர்தல் கடமைகள் குறித்த விரிவுரையானது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களால் நடாத்தப்பட்டது.
இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ். சுதாகரன், திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.கே.டி. நெரஞ்சன், பொலன்னறுவை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மற்றும் பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.








