2025 පළාත් පාලන මැතිවරණයට අදාළ තැපැල් ඡන්ද සහතික කිරීමේ ක්රියාවලියට සම්බන්ධ නිලධාරීන් (ත්රිවිධ හමුදා) සඳහා උපදෙස් ලබාදීමේ වැඩමුළුව ත්රිකුණාමලය දිසාපති හා දිස්ත්රික් ලේකම් සහ දිස්ත්රික් තේරීම්භාර නිලධාරී ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්රධානත්වයෙන් අද (03) පෙරවරු 9.30 ට දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ ප්රධාන සම්මන්ත්රණ ශාලාවේදී සම්මන්ත්රණයක් පැවැත්විණි.
අප්රේල් 22 වැනිදා පොලිසියේ, දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ සහ දිස්ත්රික් මැතිවරණ කාර්යාලයේ නිලධාරීන්ට තැපැල් ඡන්දය ප්රකාශ කිරීමත්, අනෙකුත් රාජ්ය ආයතනවල සහ ආරක්ෂක අංශවල සේවය කරන අය සඳහා 23 සහ 24 දෙදින තුළත් තැපැල් ඡන්දය ප්රකාශ කිරීමට දින නියම කර ඇත.
එම දිනවල තැපැල් ඡන්දය ප්රකාශ කිරීමට අතපසු වූවන් සඳහා නැවත ඡන්දය ප්රකාශ කිරීම අප්රේල් 28 සහ 29 යන දිනවල ත්රිකුණාමලය දිස්ත්රික් මැතිවරණ කාර්යාලයේදී පැවැත්වේ.
තැපැල් ඡන්දය නිසි පරිදි පැවැත්වීම සඳහා සහතික කිරීමේ නිලධාරීන්ගේ රාජකාරි සහ වගකීම්, පූර්ව සටහන්, ආවරණ, ඩී ලියුම් කවරයේ ඉදිරිපස සහ පිටුපස, ගැටළු, නිරීක්ෂණය කළ යුතු කරුණු, රහස්යභාවය හෙළිදරව් කිරීමේ පෝරමය, නියාමනය, දෘශ්ය අඩුපාඩු සඳහා, අනන්යතාවය, හෙළිදරව් කිරීමේ ආකෘති පත්රය - සලකුණු කරන ලද ඡන්ද පත්රිකාව, තැපැල් කාර්යාලයට භාර දීමෙන් පසු කළ යුතු දේ, සටහන් පොතේ බර තැබීම, විශේෂ අවධානය යොමු කළ යුතු අවස්ථා, සටහන් පොත යනාදී විශයයන් දිස්ත්රික් සහකාර මැතිවරණ කොමසාරිස් එස්.කේ.ඩී. නෙරංජන් මහතා විසින් පැහැදිලි කලේය.
அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு.
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான (முப்படையினர்) செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (03) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி, பொலிஸ், மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பிற அரச நிறுவனங்களில் கடமையாற்றுபவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் நடைபெறும்.
இதன்போது அஞ்சல் மூல வாக்களிப்பினை நேர்த்தியாக நடாத்தும் நோக்கில் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், ஆரம்ப கட்ட நடவடிக்கைகள், காப்புறுதிப்பொதிகள், D உறையின் முன்பக்கம் மற்றும் பின் பக்கம், அடையாளமிடுதல், பிரச்சினைகள், அவதானிக்க வேண்டிய விடயங்கள், இரகசியம் வெளிப்படுத்தல் படிவம், ஒழுங்குமுறை, காணக்கூடிய குறைபாடுகள், அடையாளம் வெளிப்படுத்துகை படிவம், மாதிரி வாக்கு சீட்டு, B உறை - அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டினை வைக்கும் உறை, ஆளடையாள வெளிப்படுத்துகை, A உறை - அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் அடையாளம் வெளிப்படுத்துகை ஆகியவற்றினை தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பும் உறை, தபால் நிலையத்தில் கையளித்த பின்னர் செய்ய வேண்டியவை, குறிப்பேட்டினை பாரமளித்தல், விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள், குறிப்பேடு போன்ற பல விடயங்கள் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நிரஞ்சன் அவர்களினால் தெளிவூட்டப்பட்டன.









