ත්රිකුණාමලය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයීය විගණන කළමනාකරණ කමිටු රැස්වීම 2025

2025 වසරේ පළමු කාර්තුව සඳහා වූ විගණන කළමනාකරණ කමිටු රැස්වීම අද (26) දිස්ත්රික් ලේකම් කාර්යාල උප ශ්රවණාගාරයේදී පැවැත්විණි. ඒ ත්රිකුණාමල දිසාපති හා දිස්ත්රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්විණි. දිස්ත්රික් ලේකම් කාර්යාලය ඇතුළු ප්රාදේශීය ලේකම් කාර්යාලවල විගණන කළමනාකරණයට අදාළ කරුණු පිළිබඳව මෙහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කෙරිණි.

මෙම අවස්ථාවට අතිරේක දිසාපති හා අතිරේක දිස්ත්රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා, ජ්යෙෂ්ඨ සහකාර විගණකාධිපති (නැගෙනහිර පළාත) එම්.එච්.එම්. අරෆත් මහතා, ගිණුම් අධිකාරී එන්.ජී.එන්. රත්න ශ්රී මහතා, ප්රධාන අභ්යන්තර විගණක කේතීස්වරන් මහතා, ප්රධාන ගණකාධිකාරී පී. ජයබාස්කර් මහතා, දිස්ත්රික් සැලසුම් අධ්යක්ෂ කේ. විජයදාසන් මහත්මිය, දිස්ත්රික් ඉංජිනේරු ඒ.කේ.එම්. නබීල් මහතා, දිස්ත්රික් ගණකාධිකාරී ඒ.එල්. ප්රසාද් විජේසිංහ මහතා, ප්රාදේශීය ලේකම් කොට්ඨාස භාර නිලධාරීන්, ප්රාදේශීය ලේකම්වරුන්, දිස්ත්රික් ලේකම් කාර්යාල සහ ප්රාදේශීය ලේකම් කාර්යාල සහකාර සැලසුම් නිලධාරීන් සහ දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ අභ්යන්තර විගණන ශාඛා නිලධාරීන් ද සහභාගී වූහ.

 
திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் - 2025
2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது இன்று (26) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலகம் உட்பட பிரதேச செயலகங்களின் கணக்காய்வு முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் தலைமை அதிபதி (கிழக்கு மாகாணம்) எம்.எச்.எம். அரபாத் , கணக்காய்வு அத்தியட்சகர் என்.ஜி.என். ரத்னஸ்ரீ, பிரதம உள்ளக கணக்காய்வாளர் பா. கேதீஸ்வரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட பொறியாளர் ஏ.கே.எம்.நபீல், முகாமைத்துவ கணக்காய்வு திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ( நிகழ்நிலை), அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள்ளக கணக்காய்வாளர் (நிகழ்நிலை) , மாவட்ட கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.